ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த அவர்களது கலாசாரம் பேணப்படுகின்ற ஒரு சூழலில் பெண்கள் தமது கருத்துக்களை கூறுவதற்கு பொதுவாக முன்வருவதில்லை. இவ்வாறான சூழல்களில் தைரியமாக முன்வருகின்ற பெண்களை வரவேற்கவேண்டும். ஊக்குவிக்க வேண்டும். அதைத்தான் ஊடறு பெண்நிலைச்சந்திப்பின் முக்கிய கருப்பொருளாகும் மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடறுவும் மட்டக்களப்பு பெண்களும் இணைந்து நடாத்திய பெண்நிலைச்சந்திப்பில் பல பெண்கள் நம்பிக்கையுடன் விவாதங்களில் பங்கேற்றார்கள். . தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள் பெண்கள் இன்னும் தமது குரல்களை பதிவு செய்தார்கள்.
நிகழ்வு 1 ” அரசியல்”
இந்நிகழ்வு ஓவியை கமலா வாசுகியின் தலைமையில் அரசியலில் பெண்களின் பங்கேற்பு என்ற கருத்தில் கல்பனாவும் அரசியலும் பெண்களும் என்ற தலையங்கத்தில் செல்வியும் கலைவாணியும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்..ஓரு நாட்டின் சனத்தொகையில் அரைப்பங்கிற்கும் அதிகமாக உள்ளவர்கள் பெண்கள் அவர்கள் அரசியலில் முடிவெடுக்கும் இடங்களிலும் இருந்தாக வேண்டும். அவ்வாறு இல்லையாயின் அது ஜனநாயக நாடாகாது. அடுத்து பெண்கள் ஆண்களில் இருந்து வேறுபட்டவர்கள். அந்த வகையில் முடிவெடுக்கும் இடங்களில்இ கொள்கைகளை உருவாக்கும் நிலைகளில் பெண்களின் தேவையும் நோக்கும் வேறுபட்டே அமையும். இது -பெண் ஆண் இணைந் த சமூகத்தை நன்கு அரசியலினூடாக பிரதிபலிப்பதாக அமையும். போன்ற கருத்துக;களை முன்வைத்திருந்தனர். சிறைக்கைதிகளாக இருக்கும் பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் பற்றி பிரியதர்சினி சிவராஜா ஸ்கைப்பினூடாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். பெண் தடுப்பு கைதிகள் மீது மிலேச்சத்தனமாகவும்இ குரூரமாகவும் சிறை அதிகாரிகள் மேட்கொண்ட தாக்குதல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு தீர்மானித்துள்ளது. என்றும் கூறினார்