ஊடறுவின் வயது 13
ஊடறுவின் பெண்ணிய உரையாடல்கள் அலைகளின் ஈரம்
திலகபாமா
பெண்ணிய இலக்கிய வரலாற்றில் ஊடறு தனக்கென தனியிடத்தைப் பெற்று தலைநிமிர்ந்து நிற்கிறது.—ஊடறுவின் பெண்ணிய உரையாடல்கள் அலைகளின் ஈரம்
முரண்பட்ட கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பதும், பிரசுரிப்பதும், தான் அந்த வரிசையில் பெண்களுக்கான இணைய முகமாகவும், அவர்களின் வெளியை உலகுக்கு அறிவிக்கும் தளமாகவும், பெண் சிக்கல்கள் குறித்த எல்லா கருத்துகளுக்கும் மதிப்பளிப்பதுமான ஊடறு.காம். நான் தொடர்ந்து வாசிக்கும் இணையதளம் “அதிகார வெளியினை ஊடறுக்கும் பெண்குரல்” என்ற கட்டியத்தோடு வெளிவரும் இவ்விதழ் ஓவியம், கவிதை, இலக்கிய செயல்பாடுகள், படைப்புகள், குறும்படம், திரைப்படங்கள், அதிலும் பெண் குறித்து அக்கறை உள்ள அனைத்து கலை இலக்கிய படைப்புகள் பேசவும், விவாதிக்கவும், கூடிய தளமாக உள்ளது. பெண்கள் படைப்புகள் குறித்து அது எவ்வகையாயினும், ஓவியமோ, கவிதையோ, திரைபடமோ ஏற்கனவே இருக்கின்ற முன்தீர்மானங்களின் வழிதான் அளவீடுகள் கொள்ளப்படுகின்றன. எனவே மீண்டும் மீண்டும் பெண் சுயசிந்தனை ஆணின் அதிகார அவ்வீடுகளுக்குள், அவர்களின் சம்மதம் பெற வேண்டி சரணடைந்து விடுகின்றது.அதை தகர்த்து விட ஊடறு போன்று இணையதளங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.