நாளை 23.06.2018 அன்று காலை 9.30 மணியளவில் மதுரை, அரசரடியில் உள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் ”தலித் இளம் பெண்கள் கூடுகை” நிகழ்வு நடைபெறுகிறது. தலித் பெண்கள் மீதான வன்முறைக்கான காரணங்கள் என்ன? அவற்றை தடுப்பதற்கு இருக்கக்கூடிய சட்டங்கள், நிறுவனங்கள் திறம்பட செயல்படுகின்றனவா? செயல்படவில்லை என்றால் அவற்றை திறன்மிக்க நிறுவனங்களாக மாற்றுவதற்கு என்னவிதமான திட்டங்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டும்? என்பது குறித்தும் அதேபோன்று தலித் பெண்களுக்கான வளங்கள் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறத
தமிழ்ச்சமூகத்தில் எல்லா நிலைகளிலும் மிகவும் ஒடுக்கப்படக்கூடிய நிலையில் தலித் பெண்கள் உள்ளனர். இந்த பாகுபாடு ஒழிக்கப்பட வேண்டும். அதற்கான முன்னெடுப்பினை எவிடன்ஸ் அமைப்பு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வில் வழக்கறிஞர்.எழில்கரோலின், பேரா.செம்மலர், தோழர்.பொன்னுத்தாய், தோழர்.ஹேமலதா, தோழர்.கௌசல்யா, தோழர்.ஷாலின், தோழர்.முத்தமிழ், வழக்கறிஞர்.மனோஜ், பேரா.பழனித்துரை, உள்ளிட்டோர் 3 தலைப்புகளில் பேச இருக்கின்றனர். ஒவ்வொரு தலைப்பிலும் 3 கருத்துரையாளர்கள் இடம்பெறுகின்றனர். இந்த நிகழ்வில் தலித் இளம் பெண்கள் பெரிதும் பங்கு பெறுகின்றனர்.
https://www.facebook.com/photo.php?fbid=1554196404710079&set=a.143755725754161.27344.100003592026417&type=3&theater