எஸ்தர் (மலையகம்) திருகோணமலையிலிருந்து.
“பழைய பாதையில் புதிய பயணம்
புதிய குடுவைகளில் பழைய மது!”
மும்பையின் ஊடறு இலக்கியத்துக்காக சிறகு பிரித்த சர்வதேச பறவைகள்)
சுவிஸை தளமாகக் கொணடியங்கும்ஊடறு இலக்கியதளமானது நானறிந்து பதினைந்து வருடங்களை அண்மித்து விட்டது.இணைய மின்னிதழில் என் கவிதைகளின் வெளி வந்தக்காலமது.செவ்வாய் கிழமைதான் றஞசி அதனை பதிவேற்றுவார் விரிவுரை முடிந்ததும் ஓடுவேன் எனது ஆக்கம் வந்துள்ளதை கண்டு மகிழ்ந்ததுண்டு மறு ஆக்கத்தை அனுப்புவேன்.இப்படித்தான் ஊடறுவின் நெருக்கமும் என் தோழமையும் உருவானது!!
ஊடறு தன் பாதைகளை வெகு தளத்துக்கு கொண்டு சென்று இன்று வரை தன்னை அடையாளப்படுத்தியதைக் காண முடிகின்றது. ஒரு மலையில் ஏறி தன் கொடியை நாட்டியுள்ளதுடன் தனது இலக்கியத் தளத்தை பெண் எழுத்துக்களால் தக்க வைத்துள்ளமையே ஊடறுவின் வெற்றி !!மலையகத்தை மறவாது இசை பிழியப்பட்ட வீணை என்ற கவிதையின் ஊடாக மலையகத்துப் பெண்களை, ஒடுக்கப்பட்ட இலக்கியத்தையும் நினைத்தமைக்கு நன்றிகள் மேலும் ஊடறு நடத்திய மலையக சந்திப்பானது ஊடறு நடத்திய காலமும் பெறுமதியானவையே! உழைக்கும் வர்க்க வாழ்வியல் சூழலில் ஒரு மலைமேலே ஏறி இறங்கி கொட்டக்கலையில் நிகழ்த்திய சந்திப்பு இதுவரை ஊடறு நடத்திய சந்திப்புக்களில் மிகவும் முக்கியத்துவமானது என்று கூறுவதில் பிழையில்லை.
‘
ஊடறு கடந்து, வருடம் நவம்பரில் இந்திய மும்பை பெரு நகரத்தில் ஏற்பாடு செய்த பெண்நிலைச்சந்திப்பு மிக முக்கியம் வாய்ந்த இன்னொரு விடயம். ஒரு எழுத்தாளராக பத்திரிகையாளராக நானும் பங்குபற்றினேன். இச்சந்திப்பை எழுத்தாளர் சமூக செயற்பாட்டாளர் புதிய மாதவி அவர்கள் ஒருங்கமைததிருந்தார். 25 ம் திகதி இடம்பெற்ற இந்நிகழ்வில் முதல் நாளில் “Sparrow” அமைப்பின் நிறுவனரும் எழுத்தாளரும் சமூக ஆர்வலரும் எழுத்தாளுருமான அம்பை மற்றும் ‘கதவுகள் திறக்கும் வானம’ உட்பட பல புத்தகங்களுக்கும் சொந்தக்காரி பதிய மாதவி ஊடறுவின் றஞ்சி மற்றும் மலேசியா சுவிஸ் இலங்கையில் இருந்தும் இந்நிகழ்வின் ஏனைய பகுதிகளில் இருந்தும் ஆர்வத்துடன் பங்குப்பற்றியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது. மும்பை பண்டுப் மேல் நிலைப்பள்ளியில் நிகழ்வை ஒழுங்குப்படுத்தியிருந்தார்கள்.
இந்த முதல் நாளில் பெண்களின் மோனோபஸ் பற்றி உரையாடினோம். மாதவிடாய் காலததை பெண்கள் முதலில் எப்படி அதனை இனம் கண்டார்கள் அப்போது அவர்களின் மனநிலை எப்படி இருந்தது என்பதை அங்கிருந்தவர்களின் அனுபவத்துடன் பேசப்பட்டது சிலர் அந்த அனுபவத்தை சொல்ல தயங்கியதையும் தவிர்த்தையும் குறிப்பிடத்தக்கது. மேலும் அம்பையும் புதியமாதவியும் தங்களின் வாழ்வியல் அனுபவக் குறிப்புக்களையும் பகிர்ந்துக் கொண்டனர். அங்கே வந்திருந்த பெண்களை கவனித்தேன் வெர்கள் பாலியல் உடல் வாழ்வியலில் நிறைய சவால்களையும் சந்தித்த அனுபவத்தைளும் பகிர்ந்தனர் மிகவும் திகிலாகவும் இருந்தது.ஒரு பறவை விட்டுச் சென்ற பறவையின் சலசலப்பாக கிடந்தது அன்று இரவு முழுதும். மும்பை மகிழ்ச்சி பெண்கள் அமைப்பினர் எங்களின் ஒன்றுக் கூடலை இன்னும் சுவாரஸ்யமாக்கினார்கள் மிகவும் தொலைவிலிருந்து வந்து இந்நிகழ்வில் பங்குபற்றியமைக் குறிப்பிடத்தக்கது.அம்பையின் முதிர்ச்சியம் அழகியப் புன்னகையும் நினைவில் தழும்பிக் கொண்டேயிருக்கின்றது.என்னுடைய கரங்களைப்பிடித்துக்கொண்டு கதைத்த அந்தக் கதகப்பு இன்னும் உணர்கிறேன் மத்தியதர வர்க்க மக்களின் வாழ்க்கையில் உள்ள துன்பியலையும் பெண்களின் போராட்டத்தையும் பகிர்ந்தமை மும்பை சந்திப்பை அதிகம் சிந்திக்கத் தூண்டியது. அன்றே மத்தியான உணவுக் பின்னர் ஸ்பரோ அமைப்பின் முலம் எடுக்கப்டட ஆவணப்படமான ;தேகம்” திரையிடப்பட்து. திருநங்கைகளின் வாழ்வியலை அம்பை அவர்கள் மிக உணர்வுடனும் மிகுந்த பிரயாசத்துடனும் இப்படத்தை எடுத்திருந்தமையைக் கண்டோம் திருநங்கைகள் சொன்ன அவர்களின் வாழ்வியலில் அவர்களின் துன்பத்தை ஆதங்கத்தைக் காணக் கூடியதாக இருந்தது நானும் அழுதேன் கரைந்தேன் சிறு மழையிலேயே!!திருநங்கைகள் தாம் கடந்து வந்த அவர்களின் வாழ்க்கையை அவர்களின் உடைந்தக் குரலில் கேட்க முடிந்தது
திருநங்கைகள் தன் கடந்து வந்தக் காலத்தையும் அவர்கள் திரு நங்கைகளாக பெயரிட்டதன் அனுபவத்தை துன்பத்தையும் நர்த்தகி நடராஜாவின் அற்புத நடனம் யாவும் என்னைக் கடடிப்போட்டது அவர்களின் வாழ்வியலின் துன்பத்தை இதை எழுதும் போது அழுதேவிட்டேன்!!நன்றி திரு அம்பை மற்றும் ஊடறு!!குடும்பத்தாலும் சமூகத்தாலும் கொண்டு ஒதுக்கப்பட்ட மூன்றாம் பாலினம் இன்று இந்தியாவில் ஒரு பெரு நகரங்களில் பிச்சை எடுத்தும் பாலியல் தொழில்களில் ஈடுபட்டும் வருகின்றனர். காரணம் அவர்களுக்கென்று தனித்துவமான அடையாளம் இல்லாதது. நாங்கள் இநத நிகழு;வுக்குப் பின்னர் எங்களின் பயணம் மட்டுங்காவை நோக்கிய நீண்டப் பயணமாக இருந்தது..நான் மும்பை தெருக்களிலும் பார்த்தேன் சில திருநங்கைகள் பிச்சை எடுப்பதை. அவர்களின் தோற்றம் மிகவும் ஏழ்மையாகவும் உடைகள் மிக அழுக்கு நிறைந்திருந்தது. அரசும் சிவல் சமூகங்களும் இவர்களுக்கென சுயதொழில் துறைகளை முன்னெடுக்க வேண்டும் பிச்சை எடுப்பதையும் பாலியல் தொழிலும் எதற்கு? ஒரு சாண் வயிற்றுக்குத்தானே? சமூகமும் அவர்களை அங்கீகரித்து இணையும் வழிவகைகளையும் செய்ய முன் வர வேண்டும் இயற்கையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் இயற்கையுடன் இயைதல் நன்று மனிதனை மனிதனை முதலில் நேசித்தாலே பாதிப் பிரச்சினை முடிந்துவிடும்
இந்நிகழ்வின் பின்னர் ஊடறு றஞ்சியின் கால்களை பதம் பார்த்தது பண்டுப் மேல்நிலைப்பள்ளியின் இரும்பொன்று அவளின் கால் வலியுடன் ஊடறு மட்டுங்காவை சென்றடைந்தோம். சாலைகள் எங்கும் மக்களாலும் வாகன நெரிசலினாலும் திக்குமுக்காடிய நிலையில் இருந்ததை அவதானித்தேன். மட்டுங்கா தேசம் எங்களை பேருவகையுடன் வரவேற்றது. அருமையான மண்டபமும் மக்கள் கூட்டமும் எம்மை உற்சாகப்படுத்தியது. மாட்டுங்காவில் இயங்குகின்ற இலெமுரியா அறக்கட்டளை செயற்பாட்டாளார் திரு குமணன் ராசா அவர்களின் தலைமையில் பெயரிட்ப்பபடாத நட்சத்திரங்கள் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது. மனதை தொடும் ஒரு நாடகம் ஒன்றும் அரங்கேற்றப்பட்டு எல்லோரின் கண்களையும் கண்ணீர் முட்டிச் சென்றது. அருமையான தருணங்கள் நன்றி இலெமுரியா அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் மும்பை மகிழ்ச்சி அமைப்பின் தோழர்கள்!! ஊடறு ரஞ்சியின் நன்றியுரையுடனும் கவிதை வாசிப்பினுடும் நிகழ்வு அற்புதமாக வடை கூடான தேநீருடனும் சூடான உரையாட்களுடனும் புதிய முகங்களின் கைக்குழுக்களுடனும் அறிமுகம் அன்புடனும் நிகழ்வு இனிதே நிறைவுற்றது,
மிகுந்த களைப்புடனும் திருப்தியுடனும் கூடுகளுக்கு திரும்பி விட்டோம்.
இரண்டாம் நாள் நிகழ்வு 2017-11-26
இரண்டாம் நாள் நிகழ்வுகளிலே ஊடறுவின் சொந்தங்களாகிய எங்களின் குரல்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஏற்கனவே தெரிவு செய்த தலைப்புக்களில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது நேரத்தையும் காலத்தையும் சுருக்கி 13 பேர் தங்களுடைய கட்டுரைகளை அழகாகவும் உணர்ச்சியுடனும் உண்மையோடும் உரையாடினர்.
நவம்பர் 26 ம் திகதி இடம்பெற்ற நிகழ்வுகள் பின் வருமாறு :
1. உரிமைகளுக்கெல்லாம் சொந்தக்காரி – விஜி(மட்டக்களப்பு)
2. இலங்கை வாழ்வியலில் கூத்துக்கலை – யாழினி(யாழ்ப்பாணம்)
3. சுதையை முதலிடும் உலகச் சந்தை – மாலதி மைத்ரேயி( டெல்லி)
4. சுமூகப் படிநிலையல் பெண்ணிலைக் கோட்பாடுகள் – கல்பனா( சென்னை –தமிழ்நாடு)
5. தனியுரிமை சட்டங்களும் பெண்;களும்(இந்தியாவைப் முன்வைத்து)ரஜனி (சட்டத்தரணி- மதுரை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு)
6. வீடும் பாராளுமன்றமும் – மையநீரோட்டத்தில் சுழிகளும் எதிர் நீச்சலும்( அவுஸ்திரேலியாவை முன் வைத்து) ஆழியாள் (கணனி மென் பொருள் வல்லுனர் -கன்பரா அவுஸ்திரேலியா)
மதிய உணவுக்குப் பின்னர் ஏனையோர் களமிறங்கினர் நான் உட்பட!!
7. குழந்தை தொழிலாளர்கள் – சுரேகா பரம் (யாழ்ப்பாணம்)
8. இலங்கை சமூகத்தில் மூடநம்பிக்கைகள் ஊடான வாழ்வியல் சூழல் எஸ்தர் – (எழுத்தாளர்ஃபத்திரிகையாளர்-மலையகம் (திருகோணமலையிலிருந்து)
இந்நிகழ்வுகளுக்குப் பின்னர் புலம்பெயர்வாழ்வியலில் இரண்டாம்தலைமுறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சிக்கல்களும்
இவற்றைப்பற்றி
9. ஜரோப்பிய வாழ்க்கைமுறையைப் பற்றி – றஞ்சி ஆனந்தி (சுவிஸ்)
10. மலேசியா வாழ்க்கை முறையைப்பற்றி – மலேசியா யோகி
தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
அவர்களை தொடர்ந்து ஊடறுவின் அன்பின் அழைப்பை ஏற்று வந்த ஈஸ்வரி தங்கப்பாண்டியனும் அனிதா டேவிட் மற்றும் மகிழ்ச்சி அமைப்பினரும்பெருநகரமும் பெண்நிலையும் என்ற அழகிய மும்பையில் பெண்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு சிறப்புற உரையாற்றினர் இந்நிகழ்வுக்குப்பின்னர் மிகுந்த நேர தட்டுப்பாடுக் காரணமாக பெண் ஆளுமைகளின் நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டது.இதில்
– சூரியா பெண்கள் அமைப்பு வெளியீடான “கூற்று” ஆழியாளினால் அறிமுகம் செய்யப்பட்டது அத்துடன் ஆழியாளின் ‘பூவுலகைக்; கேட்டலும் கற்றலும் என்ற அவுஸ்திரேலிய ஆதிக் குடிகளின் மொழி பெயர்ப்புக் கவிதையை மட்டக்களப்பு பெண் செயற்பாட்டாளர் விஜி அறிமுகத்தை நடத்தினார். மாலதி மைத்ரேயின் ‘முட்கம்பிகளால் கூடு புpன்னும் பறவை’ சுவிஸ்ஸில் இருந்து வருகைத்தந்த ஆனந்தியும் மிகவும் கவித்துவமாக மெல்லிய வார்த்தைகளால் கோர்த்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.எழுத்தாளர் எல்லோரின் மனங்களை வென்ற அன்புத் தோழர் புதிய மாதவியின் ‘பெண்ணுடல் பேராயுதம்’ என்ற நூலை ஊடறு பெபண்ணியல் செயற்பாட்டாளர் , ஊடறு ரஞ்சி அறிமுகம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நிகழ்வு இனிதே இரண்டு நாளும் நிறைவேறியது. மூன்றாம் நாள் எங்களின் பயணம் மிக அற்புதமான தருவாயைக் கொண்டு வந்து மடியில் போட்டது. நாங்கள் ஆசியாவின் மிகப்பெரிய சேரியான தாராவியை நோக்கிப் பயணப்பட்டோம் .நீண்டப்பயணம் .தாராவியை அடைய இயலவில்லை காரணம் வாகன நெரிசலில் நபரம் திணறிக் கொண்டிருந்தது. புதியமாதவி அவர்களின் புதிய புதிய வழிகாட்டல் மூலம் தாராவியின் தாய் மண்ணை முத்தமிட்டோம் .மக்கள் பரபரப்புடன் எங்களையும் பார்த்து விட்டு கடந்தார்கள் அவர்களை பார்த்து சிரிப்பதா? மௌனமாக இருப்பதா? ஒரு போராட்டம் உதடுக்கும் மனசுக்கும் சில பெண்கள் எங்களிடம் குறி சொல்ல வந்தார்கள் என்னை பார்த்து “உன்னைக் கொண்டவன் ஒரு உத்தமன் ரொம்ப புண்ணியம் புரிந்தவன் என்றாள் நீ காணும் கனவு பலிக்க நாள் செல்லாது பொன்னாத்தா” என்றாள்.ந hன் மௌனமாய் சிரித்தேன் மனிதனுக்கு இறைவன் ஏன் வயிறைப் படைத்தான் என்று? வாழ்க்கைக்குத்தான் எத்தனை வேசமாக மாறிப் போகின்றோம்
தாராவியும் மும்பையும்…
தாரவியின் வீடுகள் மிகவும் சிறியவை அவைகள் எனக்கு மலையகத்தின் லயம் வீடுகளைத்தான் நினைவுப்படுத்தியது மக்கள் மிகவும் அசௌகரியமாக வாழ்வதை கண்டேன் பொது மலசலக்கூடம் ஒரு அறை (படுக்கை) சமையலறை மற்றும் சிறிய குளியலறை காணப்பட்டது சிலர் வீடுகளை மேற்பகுதியை இன்னுமொரு அறையாக செய்து வாடகைக்கும் விட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.மக்களை அரசாங்கம் விரட்டியும் அவர்கள் அவ்விடத்தில் வாழ்கிறார்கள் காரணம் எங்களுக்கு அல்லாவிட்டாலும் பரவாயில்லை எம் பிள்ளைகள் சரி நல்ல வீடுகளில் வாழ வேண்டும் என்று நியாயமான ஆசைகைள சொன்னார்கள்.மேலும் மக்கள் இன்றுவரை அரசுடன் அதாவது மும்பை நகராட்சியுடன் போராடிவரும் தமிழ் மக்கள் அவர்களும் வாழ வேண்டும் அல்லவா!!.தாராவியின் இதயம் என்று சொல்லப்படும் மிக நீண்டகாலமாக தமிழ் மக்களை அடையாளம் சொல்லும் கோவிலைக் கண்டோம்.அதனுள் சென்று தோழிகள் புகைப்;படங்களை எடுத்துக் கொண்டனர். நான் பார்த்த தமிழ் சினிமாவின் வில்லன்களைத் துரத்தும் நெருக்கமான ஒடுக்கமான தெருவைக் கண்டு கேட்டேன் அவர்கள் சொன்னர்கள அண்மையில் ரஜனிக்காந்தின் புதிய படமான காளை படப்பிடிப்பு தாராவியில் இடம்பெற்றதாகவும் மேலதிக தகவலையும் வாங்கி வைத்துக் கொண்டேன் அரசு மீண்டும் மீண்டும் தரும் சிறிய சிறிய காணிகளில் இனியும் உங்களுக்கு புறாக் கூண்டுகள் வேண்டாம் காத்திருங்கள் போராடுங்கள் மீண்டும் நீங்கள் தரும் புறாக் கூடுகளில் இந்த தாராவியின் வாழ்க்கையை தொடர ஒத்துழைக்க வேண்டாம் பெரிய வீடுகளில் நாங்கள் மூச்சு விடவையுங்கள் அதுவரை காத்திருங்கள் போராடுங்கள் என்று அவர்களை உற்சாகப்படுத்திவிட்டு அங்கிருந்து கடந்தோம்.
தாராவி மும்பையின் உண்மை முகம் தாராவிக்கும் மும்பை விமான நிலையத்துக்கும் வெறும் அரை மணித்தியாலமே ஆகவே இச்சேரிகளைக் காலி செய்வதன் மூலம் இவ் இடத்தை மிகப்பெரிய நகரமாக்களை செய்ய முடியும் என்பதை அறிந்து இவர்களை அகற்ற கடும் பிரயத்தனம் மேற் கொண்டது ஆனாலும் மக்களும் உறுதியாக வாழ்ந்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. புpன்னர் தாராவியை விட்டு நாங்கள் மும்பையின் வடக்கு கரையில் உள்ள “மும்பை வாசல்” (ஆரஅடியi புயவந); பார்க்க சென்றோம். மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்ட தாஜ்ஜையும் கண்டோம். இரவாகி விட்டிருந்தது இருட்டுக்குள் சில புகைப்படங்களுடனும் மதுரை ரஜனியின் தேநீர்(ஜாயா) தேடலுடன் மீண்டும் நாங்கள் மிகுந்தக் களைப்புடன் பண்டுப் திரும்பினோம் தாஜ்ஜில் வெடிக்கப்பட்ட குணடுகளை விட தாராவியின் மக்களின் மனங்களில் விழுந்துக் கொண்டிருக்கும் குண்டுகளை நினைத்து மனம் சிக்கல் விழுந்துக்கிடந்தது.
ஊடறு இம்முறை மும்பை பெருநகரத்தில் வைத்த இப்பெண்ணிலை உரையாடலை சந்திப்பும் ஏனைய நாடுகளில் வைத்ததை விட சற்று கூடுதலான கனதிளுடன் இருந்தது.குறிப்பாக பல்வேறு நாடுகளிலிருந்து பெண் ஆளுமைகளும் அவர்களின் புத்தகங்களும் வெளியிடபட்டது.இம்முறையும் ஊடறுவின் அருட்பணியில் பெயரிப்படாத நட்சத்திரங்கள் இரண்டாம் பதிப்பு வெளியிட்டமை அவர்களின் ஆத்மாக்களுக்கு கொடுத்த ஆறுதல் மேலும் பெண் படைப்பாளியான ஆழியாள் (அவுஸ்திரேலியா) அவர்களின் பூவுலகைக் கேட்டலும் கற்றலும் ஆதிக்குடிகளின் மொழிபெயர்ப்பு நூலானது மிகவும் தேடல் நிறைந்ததாகவே இருந்தது.அணங்கு பெண்ணிய பதிப்பகத்தின் வெளியீடும் கூட.
மும்பையின் பயணங்களில் ரயில் பணயம் அதில் பெண்களின் சிரிப்பொலிளும் கூட்டமாக செல்லும் போது ஆண்களின் உழைப்பின் .வியர்வை வாடையும் மும்பையின் பரபரப்பை இன்னும் அழுத்தியே சென்றதைக் கண்டேன்
வெற்றியாக இவ் ஊடறுவின் பயணம் இருந்தாலும் சவால்கள், தோல்விகள், இயலாமைகள், பெண்வெளியில் இல்லாமல் இல்லை. ஒரு வேட்டைக்காரனின் நாய் போல வேட்டையாடும் மிருகத்தின் எதிர் தாக்குதலையும் வென்றதுப் போல வேட்டைப் பொருளை கொண்டு வேட்டையாடுபவனிடம் சேர்த்தாலும் வேட்டை நாய் இரவொன்றில் தன் வலியை வேட்டைக்காரனுக்கும் தெரியாமல் தானே நக்கி ஆற்றிக்கொள்ளும் இப்பெரும் நகரத்தில் வேறுபட்ட மொழி பேசும் மக்கள் ஒரு பெருநகரில் இவற்றை ஒழுங்குபடுத்தவும் புதியமாதவி அவர்கள் சவால்களை சந்தித்தார் நாமும் அதை உணர்ந்தோம். இருந்தும் நேர்மைமிக்க சிரிப்புடனும் பார்வைகளுடனும் தழுவலுடனும் அவற்றை கடந்தோம். ஊடறு வந்த எல்லோரையும் கரையை அணைக்கும் நதியாய் நகர்ந்தது நன்றி ஊடறு!! விருந்தாலும் அன்பாலும் திணற வைத்த மும்பை ஊடறு பெண்கள் சந்திப்புக்கு காலம் மறக்காது செங்கம்பளம் விரிக்கும்….!!!!!
ஊடறுவின் மும்பை பெண்ணிய சந்திப்பு பற்றிய குறிப்புகள் கீழ் உள்ள லிங்கில் வாசிக்கலாம்
-மும்பை ஊடறு சந்திப்பின்-புதியமாதவி-http://www.oodaru.com/?p=11020
வேடந்தாங்கல் பறவைகள் விட்டுசென்ற ஞாபகங்கள்…1,2,3-யோகி( மலேசியா)
http://www.oodaru.com/?p=11130
– நான் ரசித்த மும்பையும் என்னை அழைத்த ஊடறுவும் …1,2,3 -.சுரேகா பரம்
http://www.oodaru.com/?p=11156