ஸ்பேரோ பெண்கள் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் எழுத்தாளர் அம்பை அவர்கள் தொடங்கி வைத்து நிகழ்வை நடத்தினார்.மோனோபஸ் , பெண்ணுடல் அடையும்மாற்றங்கள், பெண் பூப்படையும் வயது, அதுசார்ந்த புரிதல்கள், நம்பிக்கைகள் மற்றும் குடும்பத்திலும் குடும்பத்தை சுற்றியும் பெண் அனுபவிக்கும் பாலியல் வன்கொடுமைகள், தொந்தரவுகள் என்று உரையாடல்கள் விரிந்தன உரையாடல்களின் தொடர்ச்சியாகஉரையாடல்களில் கலந்து கொண்டவர்களின் தனிப்பட்ட பெயர்களையோ அடையாளங்களையோ பதிவு செய்வதில்லை என்ற அறநிலையைக் கடைப்பிடிப்பதில் ஊடறு தெளிவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பதிவு செய்யும் காமிரக்கள் மவுனித்தன. முதல் நாள் நிகழ்வுகள் இங்கு பதிவு செய்யப்படவில்லை
கடந்த நவம்பர் 25 ,26இல் ஊடறுவின் பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் :- மும்பையில் நடைபெற்றது இச்சந்திப்பை ஒரு பெரு நகர் ஒன்றில் வேறு ஒரு மொழி பேசும் நகரத்தில் அன்புத் தோழி புதியமாதவி அவர்கள்..ஊடறு சந்திப்பை ஒழுங்மைத்திருந்தார்..பங்கு பற்றிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கலந்துரையாடிய உரைகளை ஒலிவடிவில் இங்கு கேட்கலாம்.
உரிமைகளுக்கெல்லாம் சொந்தக்காரிகள் – விஜி (இலங்கை )
இலங்கை வாழ்வியலில் கூத்துக்கலை