தகவல் -அதிரா (இலங்கை)
மலையக சமூகத்தின் சிக்கலான வாழ்க்கை நிலைமைகளை வெளிக்கொணரும் ஓவியக் கண்காட்சி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகத்தில் 20.12.2017 அன்று நடைபெற்றது.
மலையக மக்களின் வாழ்க்கை நிலைமைகளை வெளிக்கொணரும் வகையில் தேயிலைக் கொழுந்துச் சாயத்தினால் படைக்கப்பட்ட ஓவியங்கள் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டன.
நாவலப்பிட்டியைச் சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா கற்கைகள் நிறுவக நுண்கலைத்துறை இறுதியாண்டு மாணவி யுவராணி ராஜேந்திரன் இந்த ஓவியங்களை வரைந்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெய்சங்கர் இவ் ஓவியக்கண்காட்சிக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
தன் சமூகத்தின் பின்தங்கிய வாழ்க்கைப் போராட்ட நிலைமையினை வெளிப்படுத்தும் வகையில் தனது சமூக அக்கறையை ஓவியமாக வரைந்துள்ளார் யுவுராணி … யுவராணிக்கு எமது வாழ்த்துகள்….ஊடறு