….பெண்ணிய இலக்கிய வரலாற்றில் ஊடறு தனக்கென தனியிடத்தைப் பெற்று தலைநிமிர்ந்து நிற்கிறது.—புதியமாதவி
ஊடறு பெண்குரலின் தாய்வீடாக தன்னை தகவமைத்துக் கொண்டிருப்பதை அதன் 12ஆண்டு நடந்த வந்தப் பாதை நமக்குக் காட்டுகிறது. .ஊடறுவின் இந்த 12 வருட பயணத்தையும் அதில் ஊடறு எடுத்து வைத்த -மிகவும் கவனத்துடன் கடந்து வந்தப் பாதையையும் பார்க்கும் போது புலம்பெயர்ந்த ஈழத்தின் பெண்ணாக மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த பூமி உருண்டையின் பெண்ணியக்குரலாக, சாதி மதம் நாடு மொழி அடையாளங்களைக் கடந்து வந்து அதிகார வெளியினை ஊடறுக்கும் சக்தியாக தன்னை வளர்த்துக் கொண்டிருப்பதைக் காணலாம்….-புதியமாதவி