கவிதை
கோழிக் குழம்புக்கான குறிப்பு…
– மாலதி மைத்ரி- அடுக்குமாடி குடியிருப்பில் சேவல் வளர்ப்பவளுக்கு ஒரு வளர்ப்பு சேவலை எங்கு அடைப்பதென்றுத் தெரியவில்லை முதலில் சுவர்களைத் தாண்டி அதன் குரல் கசியக்கூடாதென்ற கவனத் தேள் கொட்ட முப்பொழுதும் கடுக்கும் நினைவு அவள் வீட்டிலில்லாத நேரத்திலும் தொலைக்காட்சி அலறகிறது …
Read Moreதலைப்பிலி கவிதை
-யாழினி யோகேஸ்வரன்- நிபந்தனைகளற்ற விதிமுறைகள் விலக்க முடியா சட்டங்கள் விரலே இல்லாத கூர் நகங்கள் வீழ்ந்தும் எழுந்துகொள்ள முடியா கால்கள் அத்தனை முகங்களும் நம் முன்னே எப்போதும். கொத்தாயும் குலையாயும் குண்டு போட்டு செத்தாலும், சொத்தையும் சுகத்தையும் கண்முன்னே தொலைத்தாலும் ,
Read Moreகன்னத்தில் குழிவிழும் சிறுமி
– மாலதி மைத்ரி – கன்னத்தில் குழியிருக்கும் சிறுமியை அனைவருக்கும் பிடிக்க காரணமிருக்கும் ஒரு பலூனையோ ஒரு மிட்டாயையோ சட்டென்று பார்த்தவுடன் கொடுக்கத் தோன்றும் அவள் யாரென தெரியாவிட்டாலும் தூக்கி முத்தமிட துள்ளும் ஆட்டுக்குட்டி மனதை அடக்கி செல்லமாக தட்டி பூஞ்சிரிப்பால் கண்களைச் சிமிட்டி …
Read Moreதோண்டியெடுத்தல்
– திவினோதினி- நீமறந்துபோனஞாபகம்நான் நினைவிருக்கிறதா? புதைந்திருக்குமுன்நினைவுகளைத்தோண்டிப்பார் நெருப்பின்வெம்மைக்கும்தகிக்கும்அனலிற்குமிடையில் ஒருகுளிர்ச்சியைநீஉணர்வாய் பிரியங்களின்கோடுகளாலும்நம்பிக்கையின்முடிச்சுக்களாலும் இறுகப்பிணைக்கப்பட்டிருந்தநெடுங்கயிற்றின்சிதிலங்களை நீஉணர்வாய் உன்விழித்திரைக்குப்புலப்படாதகாட்சிகளும் துயரங்களின்தொடர்ச்சியில்இருந்துவழிகின்றகண்ணீரும் நைல்நதியாகிநீண்டுநனைப்பதை நீஉணர்வாய்
Read Moreதலைப்பிலி கவிதை
— யாழினி யோகேஸ்வரன் திறந்து போனதாய்ச் சொன்ன கதவுகள் எல்லாம் ஒரே நடையில் அடைத்துப் போயின அறையெங்கும் நாற்றம் பெருக்கெடுக்கிறது மூடிய அறைகள் மனித இரத்தங்களையும் சதைப் பிண்டங்களையும் எலும்புக்கூடுகளையும் ஒரு சேர கடை பரப்பியுள்ளன உள்ளே வாழ முடியாததாயும் …
Read More“ஹிஜாப்”
எஸ்.பாயிஸாஅலி ‘’கறுப்புசூடாயில்லெ…..’’ ‘’இதுவேறொருநாட்டுப்பாரம்பரியம்…..’’ ‘’என்னவடிவுஷல்வாரில்….’’ ‘’இதோடேயேபோகலாமே….’’ ‘’நிர்ப்பந்தமா…….’’. ‘’சாறிதான்உனக்கழகு……’’ ‘’மொகத்தஅசிங்கமாக்குது…….’’ ‘’வேறையாத்தெரியிறோம்தாலிபான்கள்போல……’’ ‘’தலகாணிஉறைபோல……’’ ‘’வியர்க்காது……..?’’ ‘’……………. …………………………..’’
Read More