விஜயலக்சுமியின் தலைப்பிலி கவிதை

விஜயலக்சுமி சேகர் மட்டக்களப்பு இலங்கை இப்பொழுதெல்லாம் பாதுகாப்பைப் பலப்படுத்தும் எங்கள் வாசற் கதவுகள் திறந்தே கிடக்கின்றன. எனினும் இன்று வரை உள்ளே வருவது தெரு வாகனத்தின் புழுதிக் காற்றும் வெளியே செல்வது எங்களது சூடான ஏக்கப் பெரு மூச்சுமே

Read More

துயரக்கடலின் அழுகை முத்து

எஸ்.பாயிஸா அலி (கிண்ணியா) நாணிக்கொள்கிறேனென் நந்தவனப் பூங்கிளியே நீ சிக்கித் தவிக்கும் வெம்பாலையின் கொடுந்தளையறுக்க வியலாத எம் வெற்றுக்குரல்வளைகளை நினைந்துநினைந்தே துயரக்கடலின் அழுகைமுத்தாய் தத்தளிப்பவளே கருகிடாதோ உன் வசந்தங்களை தாவாதாமியின் கருஞ்சுவருக்குத் தின்னத்தந்த சட்டத்தின் கொடுநாவுகளும்.

Read More

தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு)   கடவுளை வஞ்சிக்கிறேன் என் பூவுலக பிறப்பிற்காக ஆத்மார்த்தமான பொழுதுகளில் அழுந்திக் கொள்ளும் மனம் அழுத்தமாக சொல்லிக்கொள்கிறது கைப்பற்றிவிடு முழுமையாக என்று, துறத்தல் எமக்கு பழையதாகி விட்டது. வீடு துறந்து, உடமை துறந்து, உரிமை துறந்து, உயிர் …

Read More

கி.”கலைமகளின்” தலைப்பிலி கவிதை

கி.கலைமகள்  மட்டக்களப்பு (இலங்கை) வசந்த கால மேகங்கள் சூழ்ந்த எங்கள் நிலங்களிலிருந்து பிரித்து எறியப்பட்டோம் எங்கள் நிலம் கடந்து எங்கள் கடல் கடந்து எங்கள் வரப்புகள் கடந்து

Read More

அருவருப்பானவளின் “குறிப்பு”

 பிறெளவ்பி (மட்டக்களப்பு)      மின்வெட்டுடன் கூடிய அடர்ந்த இருட்டில் இருந்து எழுதுகிறேன். நான் உனக்கு ‘அருவருப்பானவள்’; என்றான பின்பு… அழவில்லை, மன வேதனையின் ஆழத்தில் உள்ளேன். முன்பொரு முறை ‘சனியன்’ என்றும் மொழிந்தாய் ! அப்படிக்கு கெட்டவளா – வியப்பதுமுண்டு. இது ஜனவரி 2011. …

Read More

டீகிரி

பிறெளவ்பி (மட்டக்களப்பு இலங்கை) பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் எடுத்து விட்டால் பட்டதாரிகளாம் நான்கு வருடங்களுக்கு மேலாய் எதைப் படித்தமோ…. கற்ற கல்வியை விட – மற்ற மனிதர்களைப் படிக்க கற்றுக் கொண்டோம். இருந்தும் இன்னும் .. அடிக்கடி அர்த்தம் மாறும் மாந்தர்களின் …

Read More