மீட்டெடுக்க முடியாமற்போன விம்பம்

ஃபஹீமாஜஹான் இலக்கற்றுப் பறந்து கொண்டிருந்த சிறு பறவை விதியின் சுவரொன்றினருகே வட்டமிட்ட பொழுது யாருக்காவோ காத்திருந்த தளவாடியில் சிறகடிக்கும் தனது துரதிஷ்டத்தின் விம்பத்தைக் கண்ணுற்றது பாவனை காட்டுமந்தக் கண்ணியில் உள்ளம் சிக்கிவிட உள்ளிருக்கும் அபூர்வத்தின் ஸ்பரிசத்தைப் பெற முயன்ற தருணங்களிலெல்லாம் வலிமை …

Read More

இறவா என் தேடுதல்மட்டும்

த.ராஜ்சுகா- எனக்கான கதவுகள் மூடப்பட்டும் எதிர்பார்ப்பின் கைகள் நிறுத்தப்படவேயில்லை… முயற்சிகள் முழுமூச்சாய் பறந்தாலும் முட்டுக்கட்டைகள் அங்கங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.. கனவுகள் நீண்டுகொண்டிருப்பினும் இரவுகள் இன்னும் அப்படியேதான்…. பாதங்களில் வேகத்தை கூட்டினும் பாதைகள் பாறைகளால் மறைக்கப்பட்டேயிருக்கின்றது… வெறித்தனமான எண்ண அலைகள் வெளிக்கிளம்பியவுடனேயே வெப்பக்குகை திறக்கப்படுகின்றது…. …

Read More

தலைப்பிலி கவிதை

-சௌமியா-(மட்டக்களப்பு, இலங்கை) சுற்றித் திரியும் வண்ணப் பறவையாய் சுதந்திரக் காற்றில் மிதந்தோம் பட்டென்று குண்டு பாயவே உடைந்தன சிறகுகள் சில்லென்ற காற்று சீறியது புயலாய் நீலக் கடலின் நிறமெங்கு போனதோ கிணற்று நீரும் சிவப்பாய் மாற கூவும் குயில்கள் ரத்தம் பருகும் …

Read More

நம்பிக்கை சித்திரம்

ஓர் இலங்கைச் சிறுமி (வயது 13 பெயர் தெரியவில்லை ) (நன்றி மூன்றாம் உலகக் குரல் வெளியீடு சவுத் ஏசியன் புக்ஸ்)   என்னிடம் ஒரு வர்ணப்பெட்டி இருந்தது ஜொலித்துக் கொண்டு தூக்கலாக என்னிடம் ஒரு வர்ணப்பெட்டி இருந்தது சில சூடாக, …

Read More

இன்றும் மழைநாளாய்ப் போனது

த.ராஜ்சுகா -இலங்கை ஒற்றைக்குடையில் உன்னோடு ஒட்டிக்கொண்டு நடக்குமந் நாளுக்காகவேமழை வர(ம்) வேண்டிய‌நாட்களும் இருந்தது… பாதி மழையிலும்மீதி விழியிலுமென்று நனைய‌மனதுக்குள் அச்சாரலுக்காகவேமழைவிரும்பிய நாட்களும் இருந்தது… அரைமணி நேர அடைமழைக்குப்பின்அவலங்கள் எட்டிவிடுமிந் நாட்களில்ஆசை குறைந்தே போனது என்ஆனந்தமான மழைநாட்களில்… வீதியெங்கும் விலகமுடியாவாகன நெரிசல்கள்மீதிவழியை கடக்கமுடியாமாபெரும் …

Read More

ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றேன்

த.ராஜ்சுகா –இலங்கை, திரும்பிப்பார்க்கு மொருநாள் நான் வெறுமையாய் நின்றிருப்பேன் உறவுகளாய் எனைச்சுற்றியிருந்த‌ வரவுகளெல்லாம் தளர்ந்திருக்கும்….. நான் செலவழித்த நிமிடங்கள் நடையாய் நடந்த இலட்சியங்கள் ஓடாய்தேய்ந்த உழைப்புக்களெல்லாம் ஓர்நாளில் ஒடுங்கிப்போயிருக்கும்… வாலிபத்தளைப்பின் வெற்றிகள் வாரிசேர்த்த சொந்தங்கள் தேடிவைத்த நேசங்களெல்லாம் தேவையில்லையென எனை ஒதுக்கியிருக்கும்…. …

Read More

உயிர் சுமந்திருப்பவள்

– ஆதிலட்சுமி. வலிகளும் வேதனைகளும் புரியாத நீ எத்தனை வார்த்தைகளையும் உமிழ்ந்துசெல் அந்த வார்த்தைகளின் நெடியிலிருந்து உன் நெஞ்சிலுள்ள நஞ்சின் அளவறிகிறேன் நான். பெருநெருப்பை அள்ளி என் முற்றத்தில் புகையவிட்டுச் செல் பெருமையுடன் நான் சுவாசித்துக்கொள்கிறேன். முட்செடிகளை இழுத்துவந்து என் நடைபாதையெங்கும் …

Read More