அடையாளம்

உமா (ஜேர்மனி) தந்தையின் மடியமர்ந்து மூன்று மொழியிலும் அகரத்தை உச்சரித்த போது எனக்கு அடையாளங்கள் இருந்ததில்லை புதுவருடத் தினத்தில் கிறிபத்தும் லுனமிறிசும் சாப்பிட்டபோதும் அம்மாவுடனும் சித்தியுடனும் ஆம்பல் பூவும் பூ வட்டியும் ஏந்தி விகாரைக்குச் சென்ற போதும் எனக்கு அடையாளங்கள் இருந்ததில்லை

Read More

தான்யா,பிரதீபா-கனகா தில்லைநாதனின் “ஒலிக்காத இளவேனில்”

– தகவல்- வடலி பெரும்பான்மையாய்ப் புலம்பெயர்ந்தவர்களையே கொண்டிருக்கிற இத்தொகுதி -தமது அரசியல் நம்பிக்கைகளாலும் வாழ்முறைகளாலும் வேறுபடுகிற, சமூகத்தில் வெவ்வேறு பாத்திரங்களைக் கொண்டிருக்கிற, உலகின் பல்வேறு நகரங்களில் உள்ளவர்களை “இலங்கைப் பெண்கள்” என்கிற பொது உடன்பாட்டின் அடிப்படையில் கூட்டிணைக்க முனைந்திருக்கிறது.

Read More

தெருவில் வாழும் சிறுவர்கள்

  உலகம் திறந்த சந்தை என்றானபின்பு பெரு நகரங்களுக்கு வேலைதேடி மக்கள் இடம்பெயர்வதும்,தேசிய இனப்பிரச்சினைகள் காரணமாக மக்கள் அகதிகளாக இடம்பெயர்வதும் இந்த நூற்றாண்டின் சாபங்களாக அமைந்து விட்டிருக்கின்றன. இடம் பெயர்கிறவர்களில் பாதிப்பேர் பெண்களாவர். வேலையின்மை, குறைந்த சம்பளமும் பெண்களை இடம்பெயரச் செய்கின்றன.

Read More

கிண்ணியா எஸ்.பாயிஸா அலியின் இரண்டு கவிதைகள்

நல்லதோர் கவிதை நெய்தே… செவிப்பறை யுரசும் குரலோசையில் மடல் திறக்கும். ஷவர்த்தேனும்  நுரைப்பூவும் ஸ்பரசித்தே மெய்சிலிர்க்கும். அதிகாலைப் பிரார்த்தனைக்காய் நிலமுரசும் நுதலினிலே சுவனத்துத்தென்றல் சுழன்றடிக்கும். சமையலறைப் பரபரப்பில் நிமிசங்கள் நெருப்பாகிப் புகைந்திருக்கும் . அழுத்தலுக்காய் பிஞ்சுச்சீருடைகள் தகித்திருக்கும்.

Read More

இன்றைய அரசியலும் “அங்காடித்தெருவும்”

 – ச.விசயலட்சுமி (இந்தியா) பெண்களுக்கான முக்கித்துவம் என்ற பெயரில் லிட்டர் லிட்டராக கண்ணீரை வடியவிடுவதோ, கச்சையவிழ்ப்போ, சென்டிமென்ட் இடியட்டாக்கி வசனம் பேச வைப்பதோ இல்லாமல் கதையம்சம், காட்சிப் படுத்துதல், வசனம், பாடல்கள் என எல்லாவற்றிலும் யதார்த்தமான பெண்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக் கியிருக்கிறது.

Read More

தாயே நான் தாகித்திருக்கிறேன்

சமீலா யூசப் அலி (இலங்கை) மரணக்கோப்பையில் வாழ்க்கை வழிந்து கொண்டிருக்கும் இந்த நிமிடம்… இரவும் இன்னுமொரு பகல் தான்! தாயே நான் தாகித்திருக்கிறேன்!! ‘பலஸ்தீன் எங்கள் பூமி’ குருதிச்சொட்டுக்கள் குறிப்பெடுக்கின்றன…

Read More