நிலம் அகழ்ந்தே நிழல் விதைத்தவள்

கிண்ணியா எஸ்.பாயிஸா அலி உயிரே உருகி ஒழுகும் ஓயாப் பணிகளையும் கோடிமுறை ஊடறுத்துப் போகுதே… இதயக்கிண்ணமதை நிறைத்து நுரைத்து பொங்கி வழிந்தோடும் உன் ஞாபக அதிர்வுகள் வரிவடிவமாகலின் வலிகள். இதோ… முற்றத்திலே நீ நட்ட மாமரங்கள். துளிர்த்துக் கிடக்குமதன் தங்கத் தளிரும் …

Read More

அ-ப்-பா.

– நளாயினி  தாமரைசெல்வன்  (சுவிஸ்) அ-ப்-பா. எனக்கும் அப்பாவுக்கும் நெடுகப்போட்டி. அடிக்கிறாரோ இல்லையோ வைத்த தடியை காணம் காணம் என்றபடி பூவரசம் தடி சீவிவைக்க மறப்பதே இல்லை. நானுமோ எடுத்தெறியாமல் விட்டதே இல்லை.

Read More

மொழி சொல்லும் உன் அழுத்தங்கள்

பிறெளவ்பி (மட்டக்களப்பு ) என்னைக் கைது செய்து மௌனிக்க வைத்து                                      தடுமாற்றித்                                        தீண்டித் தழுவி என்னை உனக்கே அர்ப்பணம் சென்கிறாய்.!

Read More

நிலம் – ஃபஹீமாஜஹான்

1)  ஆற்றின் மடியூறிச் சேற்று வெள்ளம் பாய்ந்தோடும் கார் காலங்களில் தண்ணீருக்காக அலைந்து நொந்தவள் தன்னந்தனியாக நிலத்தை அகழ்ந்து தெள்ளிய நீர்க் கிணறொன்றை உருவாக்கினாள் அவளாக மண் குலைத்துச் சுமந்து குளிர்ந்த நிழலை வைத்திருக்கும் குடிசையொன்றையும் கட்டியெழுப்பினாள்

Read More

பத்திரிகையிலிருந்து வந்திருக்கும் ஐயாக்களோடு…

மூலம் – சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை கவிஞர் குறித்து… இலங்கையில் களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிதாயினி சஜீவனி கஸ்தூரி ஆரச்சி, ஒரு சட்டத்தரணியாவார். இதுவரையில் இவரது ‘Gangadiyamathaka’,  ‘Ahasa thawamath anduruya’ஆகிய இரண்டு கவிதைத் …

Read More

காவலரணிலிருந்த இராணுவ வீரனுக்குத் தங்கம்மா சொன்ன கவிதை

மொழிபெயர்ப்புக் கவிதை மூலம் – தர்மசிறி பெனடின் தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை முதியவளான என்னில் துப்பாக்கிக் கத்தியால் குத்திக் குத்தி என்ன தேடுகிறாய் பிள்ளையே வெடிப்புக்கள் கண்டு பால் வரண்ட மார்புகளன்றி வேறெவை சுருக்கங்கள் விழுந்த என்னிடம்

Read More

அடயாளத் தொலைவு

பிறெளவ்பி (மட்டக்களப்பு இலங்கை) கனவில் கழிகின்ற இறுதி இராவுகளுள் யாரைக் குறை காண்பது ? தலையெழுத்தே தடம்புரண்டு தலைமாறிப் போகின்றது ! தவறு யார் மீதென்பது ? கூட்டத்தில் தனிமையாய் உள்ளம் குமுறுகிறது !

Read More