சருகாகி…

பிறெளவ்பி (மட்டக்களப்பு, இலங்கை )   முடியாது என்ற பின்பும் முயல்கின்றேன் ! மனதில் ஒருத்தி மஞ்சத்தில் ஒருத்தி ….  ஜீரணித்து கொள்ளலாமோ ?  காரணமில்லா காரியங்களை வகுத்து கொண்டு மனசெல்லாம் உன் நினைவுகள் நிறைந்திருக்க மீண்டும் தனிமையை பரிசளிக்கிறாய் ! நிஜ பிரியத்தை …

Read More

தோழி செங்கொடிக்கு – மாலதி மைத்ரி

பெண் சமைப்பாள், படுப்பாள், பெற்றெடுப்பாள், விற்பாள் இழிவுபடுத்தப்பட்ட பிம்பங்களாய் பெருகி வழியும் வெளியில்   தினம் தினம் செத்துமடியும் உடலை சுமந்து திரியும் சடலங்களுக்கு மத்தியில் உடலையே ஆயுதமாய் உயர்த்தி பிடித்தாயோ

Read More

MAMA

-பெண்ணியா ஒரு முறை முத்தமிட்டேன் பிறகு நடந்து கொண்டே இருந்தேன் திரும்பிப் பார்க்காமல் நடந்து கொண்டே இருந்தேன். உனது காலடியில் இருந்த எனது நாட்களுக்குள். நினைத்துப் பார்க்கிறேன்

Read More

தவளை ராணி

கி.கலைமகள் (இலங்கை) தவளை ராணி அந்த நீண்ட பாதையைக்கடக்க காத்திருந்தாள் பாதைகளில் பாம்புகள் நெளிந்தன பாம்புகளை தூங்க வைத்து பாதையினை கடப்பதற்கு கதைகள் சொல்ல தொடங்கினாள் ஒவ்வொரு கதைகளும் நீண்டன

Read More

எங்களை இப்படியே தனியே இருக்க விடுங்கள்

கி.கலைமகள் எங்களை இப்படியே தனியே இருக்க விடுங்கள் எந்த பாதையையும் கடக்க விருப்பமில்லை முன்னமே வகுக்ககப்பட்ட இந்த விதிகளை சுமந்தபடி முன்னம் ஒரு பொழுது கடக்க முனைந்த அதே இடத்தில் அப்படியே நீங்கள் எண்ணியபடி இங்கு அதிக வெளிச்சமோ காற்றோ உங்களை …

Read More

ஆயிரம் யன்னல்களையும் அடித்துச்சாத்துங்கள்

சமீலா யூசப் அலி (மாவனல்ல, இலங்கை) ஆயிரம் யன்னல்களையும் அடித்துச்சாத்துங்கள் இல்லை என்ற வார்த்தையை அள்ளி விடுங்கள் ஒரு யாசகனின் திருவோடாய் வந்த என் இதயம் இப்போதோ ஒரு ஈந்தளித்துக் களிக்கும் செம்மலாய் மாறி விட்டது.

Read More

பின் தங்கிய சிறுமியிடமிருந்து

ஃபஹீமாஜஹான்(இலங்கை) 2011.02.21 மேசைமீது உருண்டோடும் பென்சிலை “ஓடாமல் நில்” என அதட்டி நிறுத்தி என்னுலகத்தைச் சரிசெய்தபின் எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில் உங்களால் முன்வைக்கப் படுகின்ற வினாக்களைச் செவியுற்று வெகுவாகக் குழம்புகிறேன் கரும்பலகையின் இருண்மைக்குள் கண்ணெறிந்து …

Read More